Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஹேட்டர்களுக்கு அஜித் போட்ட லேட்டஸ்ட் ட்வீட்

ajith latest tweet

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியானதைத் தொடர்ந்து தற்போது ajith 61 என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஐதராபாத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த நேரத்தில் அஜித்குமார் தன்னுடைய வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்க்காக பதிவு செய்திருப்பதை பற்றி ட்வீட் செய்துள்ளார் அவருடைய மக்கள் தொடர்பாளர் சுரேஷ் சந்திரா.

அதாவது ஒரு கழுதையின் மீது மனைவியை உட்கார வைத்து நான் நடந்து சென்றால் கோழை என கூறுவார்கள். அதுவே கணவன் அமைந்து மனைவி நடந்து வந்தால் கொடுமைக்காரன் என சொல்வார்கள்.

சரி இருவரும் நடந்து கழுதை எடுத்துச் சென்றால் மூளை இல்லாதவர்கள் என கூறுவார்கள். இது போன்று நாம் என்ன செய்தாலும் 4 பேர் அதை பற்றி குறை சொல்லத்தான் செய்வார்கள். மற்றவர்கள் சொல்வதை வைத்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்ய கூடாது.

நமக்கு சரி எனத் தோன்றும் விஷயங்களை துணிந்து செய்ய வேண்டும் என கூறியுள்ளார். இந்த புகைப்படத்தை சுரேஷ் சந்திரா தங்களுடைய மிட்டை பக்கத்தில் பதிவு செய்ய இது ரசிகர்கள் மத்தியில் பேசு பொருளாக மாறியுள்ளது.