Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

துபாயில் குடும்பத்துடன் அஜித்.. வைரலாகும் வீடியோ

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான அஜித், துணிவு படத்தை தொடர்ந்து ‘விடாமுயற்சி’ படத்தில் நடிக்கிறார். இப்படத்தை தடையறத் தாக்க, மீகாமன், தடம், கலகத் தலைவன் உள்ளிட்ட படங்களை இயக்கிய மகிழ்த்திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தை லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் சத்தமின்றி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அர்ஜுன், திரிஷா, ரெஜினா, சந்தீப் கிஷன் ஆகியோர் நடித்து வருவதாக கூறப்படுகிறது. சமீபத்தில் நடிகர் அஜித் மற்றும் திரிஷா படப்பிடிப்பிற்காக அஜர்பைஜான் செல்ல சென்னை விமான நிலையம் வந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

இந்நிலையில், நடிகர் அஜித் துபாயில் இருக்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, “துபாய் நாட்டு கடற்கரையில் ஒரு சொகுசு படகில் நடிகர் அஜித் குடும்பத்துடன் பயணம் செய்கிறார். அப்பொழுது அருகில் உள்ள படகில் இருந்த சில ரசிகர்கள், அவரை நோக்கி ‘தல’ என்று கோஷமிட, தன் கைகளை உயர்த்தி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து சென்றார் அஜித்” இந்த வீடியோ இணையத்தில் மிகப்பெரிய அளவில் பகிரப்பட்டு வருகிறது.