தமிழ் சினிமாவின் பிரபல தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாக இருந்து வருவது சன் பிக்சர்ஸ் நிறுவனம். நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும் படத் தயாரிப்பில் புத்துயிர் பெற்று தொடர்ந்து பல்வேறு படங்களை தயாரித்து வருகிறது.
குறிப்பாக விஜய், சூர்யா, ரஜினி, தனுஷ், சிவகார்த்திகேயன் என தொடர்ச்சியாக பெரிய நடிகர்களை வைத்து படங்களை தயாரித்து வருகிறது. ஆனால் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியான பீஸ்ட், எதற்கும் துணிந்தவன், அண்ணாத்த என பெரிய நடிகர்களின் படங்கள் அனைத்தும் கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.
இப்படியான நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் அடுத்ததாக அஜித் நடிக்கும் படம் தயாரிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் மற்றும் சிறுத்தை சிவா கூட்டணியில் உருவாக உள்ள படத்தை தான் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் வெளியாகப்போகும் இந்த படமாவது நல்ல வரவேற்பை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.
