கோலிவுட் திரை உலகில் ரசிகர்களால் அன்போடு தல என்று அழைக்கப்பட்டு வருபவர் நடிகர் அஜித் குமார். இவரது நடிப்பில் வரும் பொங்கலுக்கு துணிவு திரைப்படம் வெளியாக உள்ளது. போனி கபூர் தயாரிப்பில் வினோத் இயக்கத்தில் வெளியான நேர்கொண்ட பார்வை, வலிமை உள்ளிட்ட படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்த கூட்டணியில் துணிவு திரைப்படம் வெளியாகிறது.
மஞ்சு வாரியர், சமுத்திரகனி உட்பட எக்கச்சக்கமான நடிகர் இணைந்து நடித்துள்ள இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை தொடர்ந்து தல அஜித்தின் நியூ லுக் புகைப்படம் வைரலாகி வருகிறது. அப்புகைப்படத்தில் தல அஜித் க்ளீன் ஷேவ் மற்றும் ஹேர் கலரிங் செய்து கொண்டு தனது குடும்பத்துடன் புகைப்படம் எடுத்திருக்கிறார். அந்த லேட்டஸ்ட்டான புகைப்படத்தை அஜித் ரசிகர்கள் இணையதளத்தில் ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.
My Love 😍🥰❤ #Ajithkumar pic.twitter.com/6Un7k1qWOk
— Shalini Ajith Kumar (@ShaliniAjithK) December 1, 2022