Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அஜித்தை விமர்சித்த ப்ளூ சட்டை மாறன்.. பதிலடி கொடுத்த அஜித்.. வைரலாகும் தகவல்

Ajith Reply to Haters

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் வேட்டையாடி வருகிறது. இந்த நிலையில் அஜித் தன்னுடைய மேனேஜர் சுரேஷ் சந்திரா மூலமாக தன்னுடைய 30 வருட சினிமா வாழ்க்கை பற்றி பேசியுள்ளார்.

இது குறித்து சுரேஷ் சந்திரா பதிவு செய்துள்ள பதிவில் என்னுடைய ரசிகர்கள், ஹேட்டர்ஸ், நடுநிலையாளர்கள் என அனைவருக்கும் என்னுடைய நன்றி. எப்போதும் அன்பை மட்டுமே அளிப்பேன். வாழ் வாழ விடு என கூறியுள்ளார். உங்களிடம் இருந்து கிடைக்கும் அன்பு, வெறுப்பு மற்றும் விமர்சனங்கள் என அனைத்தையும் ஏற்றுக் கொள்வதாக தெரிவித்துள்ளார்.

சுரேஷ் சந்திராவின் இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. கடந்த 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் அஜித் இதை தெரிவித்திருந்தார். தற்போது அதனை சுரேஷ் சந்திரா மீண்டும் நினைவு படுத்தி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.