தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வலிமை திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக ajith 61 ஒன்று என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.
அஜித்துடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்ற ஆசை மேலான நடிகர் நடிகைகளுக்கு உண்டு. அதேபோல் அஜித்தை இயக்க வேண்டும் என்ற ஆசையும் பெரும்பாலான இயக்குனர்களுக்கு உண்டு. அஜித்துடன் பணியாற்றியவர்கள் எப்போதும் அவரை புகழ்ந்து பேசி உள்ளனர்.
இந்நிலையில் இயக்குனர் பேரரசு நிகழ்ச்சி ஒன்றில் பேசியபோது விசுவாசம் படத்திலிருந்து அஜித்துக்கு போன் போட அப்போது ஆத்விக் பேசிய விஷயங்களை பகிர்ந்துள்ளார். ஆத்விக் போன் எடுத்துப் பேச அப்போது அப்பா எப்படி இருக்கிறார் என கேட்டேன். தூக்கு துரை தானே ரொம்ப நல்லா இருக்காரு என கலாய்த்ததாக தெரிவித்துள்ளார்.
இதைக் கேட்ட அஜித் ரசிகர்கள் குட்டி தலைக்கு இவ்வளவு குசும்பா என கமெண்ட் அடித்து வருகின்றனர்.