அஜித் நடித்து பிப்ரவரி 23ஆம் தேதி இன்று வெளியாகவுள்ள (கனடிய நேரம்) வலிமை திரைப்படம் இன்று டொரோண்டோ நகரில் மட்டும் இரவு காட்சி 16 திரைகளில் திரையிடப்படுகின்றது.
அதிக தமிழர்கள் வாழும் கனடா டொரோண்டோ நகரில் இன்று இரவு காட்சி திரையரங்குகளில் விற்றுத்தீர்ந்துள்ளது.
திரையரங்குகளில் முன்பதிவு துவங்கிய சில நிமிடங்களிலேயே முதல் சில நாட்களுக்கான டிக்கெட்கள் விற்றுத் தீர்ந்துள்ளன.
அஜித்தை நாயகனாக வைத்து போனிகபூர் தயாரிப்பில் எச். வினோத் இயக்கியிருக்கும் திரைப்படம் ‘வலிமை’. இந்தப் படத்தில் ஹிமா குரேஷி, கார்த்திகேயா கும்மகொண்டா, சுமித்ரா, யோகி பாபு, அச்யுத்குமார், பாவல் நவகீதன் உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடித்துள்ளனர்.
இந்த படத்திற்கு நீரவ் ஷா ஒளிப்பதிவுசெய்திருக்கிறார். யுவன் ஷங்கர் ராஜா பாடல்களை உருவாக்கியிருக்கிறார். பின்னணி இசை கோர்க்கும் பணிகளை ஜிப்ரான் செய்திருக்கிறார்.
முன்னதாக பொங்கல் தினத்தன்று இந்தப் படம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கொரோனா பரவல் காரணமாக அறிவிக்கப்பட்ட கட்டுப்பாடுகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டு இன்று வெளியிடப்படுகின்றது.