Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

மனைவியுடன் செம மாஸ் லுக்கில் அஜித்.. அழகிய புகைப்படம் இதோ

Ajith With Family Latest Photos

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் வெளியான வலிமை திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் வசூலில் மாஸ் காட்டி வருகிறது. அடுத்ததாக ajith 61 ஒன்று என்ற படத்தில் நடிப்பதற்காக தயாராகி வருகிறார். இந்தப் படத்தையும் வினோத் இயக்க போனிகபூர் தான் தயாரிக்கிறார்.

ஏற்கனவே படத்தின் ப்ரீ லுக் போஸ்டர் வெளியாகி இருந்தது. இந்த நிலையில் தற்போது தல அஜித் குமார் தலை முழுவதும் நரைத்த முடி மற்றும் நரைத்த தாடியுடன் குடும்பத்தோடு எடுத்துக் கொண்ட அழகிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படங்கள்தான் இன்று சமூக வலைதளங்களில் டாப் ட்ரெண்டிங்காக இருந்து வருகிறது.