Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

துணிவு படத்தின் ஷூட்டிங் ஸ்பாட்டில் போனி கபூர் உடன் அஜித்.. வைரலாகும் லேட்டஸ்ட் கிளிக்

ak-thunivu-movie-shooting-spot-photo

தென்னிந்திய திரை உலகில் அல்டிமேட் ஸ்டார் ஆக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் அஜித் குமார். இவர் தற்போது வலிமை திரைப்படத்தை தொடர்ந்து மீண்டும் வினோத் இயக்கத்தில் உருவாகும் “துணிவு” திரைப்படத்தில் நடித்துள்ளார். போனி கபூர் தயாரிப்பு ஜிப்ரான் இசையில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து தற்போது டப்பிங் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர் நடிக்க சமுத்திரகனி மற்றும் பல திரை நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து இருக்கின்றனர்.

மேலும் இப்படத்தை வரும் பொங்கல் பண்டிகைக்கு வெளியிட படக்குழு முழு வீச்சில் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் தயாரிப்பாளர் போனி கபூருடன், அஜித் நின்று பேசிக் கொண்டிருப்பது போல் எடுக்கப்பட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த புகைப்படத்தை கண்டு சர்ப்ரைஸ் ஆன ரசிகர்கள் அதனை இணையத்தில் ஷேர் செய்து ட்ரெண்டிங் ஆக்கி வருகின்றனர்.

ak-thunivu-movie-shooting-spot-photo
ak-thunivu-movie-shooting-spot-photo