கோலிவுட் திரை உலகில் தவிர்க்க முடியாத முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் அஜித்குமார். இவரது நடிப்பில் வினோத் இயக்கத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வெளியான துணிவு திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பை பெற்று கொண்டாடப்பட்டு வருகிறது. இப்படம் தொடர்பான விமர்சனங்கள் இணையத்தை ஆக்கிரமித்து வரும் நிலையில் இப்படத்தை தொடர்ந்து அஜித் அடுத்ததாக நடிக்க இருக்கும் ஏகே 62 திரைப்படம் குறித்த அப்டேட்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதாவது, விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் அடுத்ததாக நடிக்க இருக்கும் திரைப்படம் ஏகே 62. லைக்கா நிறுவனம் தயாரிப்பில் உருவாக இருக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். ஏற்கனவே இப்படத்தில் அஜித்துடன் இணைந்து அரவிந்த்சாமி, சந்தானம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி வைரலானது தொடர்ந்து இப்படத்தின் கதாநாயகி குறித்த தகவல் தற்போது வெளியாகி வைரலாகி உள்ளது.
அதன்படி இப்படத்தில் 22 ஆண்டுகள் கழித்து நடிகர் அஜித் உடன் இணைந்து நடிகை ஐஸ்வர்யா ராய் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் ஆச்சரியமடைந்த தல ரசிகர்கள் இந்த தகவலை பயங்கரமாக வைரலாக்கி வருகின்றன. மேலும் இது குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
#AK62 exclusive update 🥁#AishwaryaRai has been almost finalized to play female lead🤩🔥
The duo have previously shared screen together in Kandukondain Kandukondain❣️#AK – #VigneshShivan— AmuthaBharathi (@CinemaWithAB) January 16, 2023