அல்டிமேட் ஸ்டார் அஜித்குமாரின் துணிவு திரைப்படம் கடந்த 11ஆம் தேதி வெளியானது. எச் வினோத் இயக்கத்தில் மஞ்சு வாரியர், சமுத்திரகனி, ஜான் கொக்கேன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்திருந்த இப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வசூல் ரீதியாகவும் விமர்சனம் ரீதியாகவும் மாபெரும் வெற்றியை பெற்று வருகிறது.
இந்நிலையில் இப்படத்தை தொடர்ந்து தல அஜித் குமார் அடுத்ததாக நடிக்க இருக்கும் ஏகே 62 திரைப்படத்திற்கான அப்டேட்களும் அவ்வப்போது இணையத்தில் வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் லைக்கா நிறுவனம் தயாரிப்பில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித் நடிக்க இருக்கும் ஏகே 62 திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் பிப்ரவரி மாதம் தொடங்க இருப்பதாகவும் மும்பை & குஜராத் ஆகிய இடங்களில் படப்பிடிப்பை எடுக்க படக்குழு திட்டமிட்டு இருப்பதாகவும் புதிய தகவல் இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இந்த தகவல் தற்போது தல ரசிகர்களின் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.
#AK62 Vikatan Article⭐
• Shoot Starts From FEBRUARY..🤙🏾
• #AishwaryaRai Not Part Of The Film✌🏾
• Shoot Planned At Mumbai & Gujarat💥
• #VijaySethupathi Heard Story & Said " Sema Mass🔥 "#AjithKumar | #Anirudh | #Wikki— Saloon Kada Shanmugam (@saloon_kada) January 18, 2023