உடல் ஆரோக்கியத்திற்காக தினமும் பசுமாட்டு கோமியம் குடிப்பதாக கூறி அதிர வைத்துள்ளார் டாப் ஹீரோவான அக்ஷய் குமார்.
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அக்ஷய் குமார். இவர் தமிழில் டூ பாயிண்ட் ஓ படத்தின் வில்லனாக நடித்திருந்தார்.
இவர் சமீபத்தில் பியர் கிரில்ஸ் நடத்தும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவருடன் அடர்ந்த காட்டுக்குள் பயணித்தார். மேலும் பியர் கிரில்ஸ் தனக்கு யானை சாணத்தில் டி போட்டு கொடுத்ததாக அக்ஷய் குமார் கூறினார்.
இந்த பயணம் குறித்து பியர் கிரில்ஸ், அக்ஷய் குமார், ஹீமா குரோஷி ஆகியோர் லைவ் சேட்டில் கலந்து கொண்டனர். யானை சாணத்தில் டீயை எப்படி குடித்தீர்கள் என ஹூமா குரோஷி கேள்வி எழுப்பினார்.
அதற்கு அக்ஷய்குமார் நான் தினமும் பசு மாட்டு கோமியம் குடிப்பதால் எனக்கு இது பெரியதாக தெரியவில்லை என கூறியுள்ளார். உடல் ஆரோக்கியத்திற்காக தினமும் கோமியம் அருந்துவதாகவும் தெரிவித்துள்ளார்.
அக்ஷய் குமாரின் இந்த பேச்சு ரசிகர்களை அதிர வைத்துள்ளது.