Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

தாஜ்மஹாலில் திருமண நாளை கொண்டாடிய அலங்கு பட நடிகர்.!!

Alangu actor Gunanidhi celebrated his wedding anniversary Photos.!!

கடந்த ஆண்டு ஆக்சன் மற்றும் திரில்லர் திரைப்படமாக வெளியானது அலங்கு. இந்தப் படத்தை எஸ்.பி சக்திவேல் இயக்க மேக்னாஸ் ப்ரொடக்ஷன் மற்றும் டிஜி பிலிம்ஸ் இணைந்து தயாரித்து இருந்தது. இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும் காளி வெங்கட், செம்பன் வினோத், அப்பானி சரத், ஸ்ரீரேகா போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்தப் படத்தில் கதாநாயகனாக நடித்து பிரபலமானவர் குணாநிதி.

நடிகர் குணாநிதி இன்று அவரது மூன்றாவது திருமண நாளை மனைவியுடன் தாஜ்மஹால் சென்று கொண்டாடியுள்ளார். அந்த புகைப்படங்களை வெளியிட்டு நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில், நான் முதன் முதலில் தாஜ்மஹாலை பார்வையிட்டபோது நான் அந்த ஒருவருடன் திரும்பி வருவேன் என்று எனக்குத் தெரியும்.என் வாழ்க்கையின் அன்பும் என் குழந்தை பருவ கனவும் நனவாகியதன் மூலம் அதன் மூச்சடைக்க வைக்கும் அழகை நான் அனுபவிக்க முடிந்தது.

வாழ்க்கையின் மிகவும் அற்புதமான தருணங்கள் நாம் அன்புக்குரியவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் தருணங்கள் என்று பதிவிட்டு மனைவியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்களை அவருடைய instagram பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு திருமண வாழ்த்து சொல்லி வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Gunanidhi (@gunanidhi.dg)