Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

புஷ்பா 3 படம் குறித்து லேட்டஸ்ட் தகவலை பகிர்ந்து கொண்ட அல்லு அர்ஜுன். வைரலாகும் பதிவு

allu-arjun-pushpa-3-is-conform update

புஷ்பா படத்தின் 3-ம் பாகத்தையும் நீங்கள் எதிர்பார்க்கலாம் என்று நடிகர் அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.கடந்த 2021-ம் ஆண்டு சுகுமார் இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிப்பில் வெளியான ‘புஷ்பா: தி ரைஸ்’ படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதன் தொடர்ச்சியாக 2-ம் பாகமான ‘புஷ்பா: தி ரூல்’ படத்தை சுகுமார் இயக்கி வருகிறார். இப்படம் வரும் ஆகஸ்ட் மாதம் 15-ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பெர்லின் திரைப்பட விழாவில் ‘புஷ்பா தி ரைஸ்’ படம் திரையிடப்பட உள்ளது. தற்போது அல்லு அர்ஜுன் படக்குழுவுடன் பெர்லினுக்கு சென்றுள்ளனர்.

அங்கு பேசிய அல்லு அர்ஜுன் \”நீங்கள் நிச்சயமாக ‘புஷ்பா’ படத்தின் 3-வது பாகத்தை எதிர்பார்க்கலாம் என்று கூறியுள்ளார்அதன் அடுத்த பாகங்களை உருவாக்க நாங்கள் விரும்புகிறோம். அதற்கான அற்புதமான யோசனைகள் எங்களிடம் உள்ளன. புஷ்பா 2-வது பாகம் முதல் பாகத்தை விட வித்தியாசமாகவும், புதுவித அனுபவமாகவும் இருக்கும். காரணம் உள்ளூரில் இருந்த கதைக்களம், இந்திய அளவிலும், சர்வதேச அளவிலும் விரிவடைந்துள்ளது.புஷ்பா முதல் பாகத்தில் போலீஸ் அதிகாரி பன்வர் சிங் ஷெகாவத் கதாபாத்திரத்தில் நடித்த ஃபஹத் ஃபாசில், இந்த பாகத்தில் புஷ்பாவுக்கு பெரும் சவாலாக இருப்பார். மேலும் இருவருக்குமான மோதல் மிகப் பெரிய அளவில் இருக்கும்\” என்று அல்லு அர்ஜுன் தெரிவித்துள்ளார்.

 

 

View this post on Instagram

 

A post shared by Allu Arjun (@alluarjunonline)