தேவையான அளவு பாதாம் பருப்பை நன்கு ஊற வைத்து பிறகு தோல் நீக்க வேண்டும். தோலுரித்து சுத்தம் செய்த பாதாம் பருப்பை மிக்ஸியில் சிறிது பால் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.
பிறகு அடுப்பை பற்ற வைத்து வாணலியில் 3 கப் பாலை நன்கு சுண்ட காய்ச்சிய பிறகு பாதாம் பாலை சேர்க்க வேண்டும். தேவையான அளவு சர்க்கரையை சேர்த்து நன்கு கலக்கிய பிறகு நிறத்திற்காக குங்குமப்பூ அல்லது கேசரி பவுடரை சிறிதளவு சேர்க்கவும்.
இறுதியாக ஏலக்காயை நன்கு அரைத்து தூவி கெட்டியான பதம் வரும் வரை கிளறி இறக்க வேண்டும்.
இதனை நன்கு ஆற வைத்து ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து குடித்தால் பாதாம் பால் ரெடி.. இதைத் தொடர்ந்து குடித்து வரும் நிலையில் செரிமான பிரச்சனைகள் உள்ளவர்களுக்கு தேவையான சத்துக்கள் கிடைக்கும்.