ரத்த சோகை பிரச்சனை இருப்பவர்களுக்கு கற்றாழை மருந்தாக பயன்படுகிறது.
பொதுவாகவே கற்றாழை ஆயுர்வேத மருத்துவத்தில் பயன்படுத்துகின்றனர் . கற்றாழை ஜூஸ் குடிப்பது நம் உடலுக்கு பல நன்மைகளை கொடுக்கும் என அனைவரும் அறிந்ததே. குறிப்பாக மலச்சிக்கல் பிரச்சனையை போக்குவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
கற்றாழை சாறு குடிப்பதன் மூலம் செரிமான பிரச்சனையை குணப்படுத்தி குடலை சுத்தமாக வைத்திருக்க உதவுகிறது. மேலும் மஞ்சள் காமாலை ரத்த சோகை பித்த நாளம் பித்தப்பை போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த கற்றாழை சாறு மிகவும் உதவுகிறது.
தினமும் கற்றாழைச் சாறு குடிப்பதன் மூலம் பசியை அதிகப்படுத்தவும் எடை அதிகரிப்பை கட்டுப்படுத்தவும் உதவுகிறது. கற்றாழையில் கால்சியம் குரோமியம் செலினியம் மெக்னீசியம் பொட்டாசியம் சோடியம் போன்ற பல சத்துக்கள் இருக்கின்றன.
வெறும் வயிற்றில் கற்றாழை சாறு குடித்தால் தைராய்டு பிரச்சனை மற்றும் குடல் இயக்கங்களை எளிதாக உதவுகிறது. இப்படி பல்வேறு பிரச்சனைகளுக்கு மருந்தாக இருக்கும் கற்றாழை சாறு குடித்து உடல் ஆரோக்கியமாக வாழலாம்.