தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருகிறார் தளபதி விஜய். இவரது நடிப்பில் நாளை பீஸ்ட் திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. இந்த நிலையில் இந்த படத்தின் பிரமோஷனுக்காக தளபதி விஜய் சன் டிவியில் விஜய் உடன் நேருக்கு நேர் என்ற பெயரில் ஒளிபரப்பான பேட்டி நிகழ்ச்சியில் பங்கேற்றார்.
படத்தின் இயக்குனரான நெல்சன் தொகுப்பாளராக இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி விஜயிடம் பல்வேறு கேள்விகளை கேட்டார். அப்போது உங்கள் மகன் சஞ்சய் எப்போது நடிக்க வருவார் என கேட்டதற்கு அவன் என்ன மன நிலையில் இருக்கிறான் என்பது எனக்கு தெரியவில்லை. நடிக்கப் போகிறாரா அல்லது கேமராவை தூக்க போகின்றன என்பது அவர் விருப்பம் அவன் எது செய்தாலும் அதற்கு என்னுடைய சப்போர்ட் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
மேலும் ஒரு நாள் பிரேமம் பட இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் என்னை பார்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். சரி வாருங்கள் என நானும் சொல்லி இருந்தேன். அவர் எனக்காக கதை ஏதோ சொல்ல வருகிறார் என நினைத்தேன் ஆனால் என்னை சந்தித்து உங்களது மகனுக்கு ஒரு கதை வைத்திருக்கிறேன் என கூறினார். அவர் சொன்ன கதை எனக்கு மிகவும் பிடித்திருந்தது. என்னுடைய மகனிடம் இதுபற்றி கேட்டதற்கு சில வருடங்களுக்கு இது வேண்டாம். சாரிடம் நான் சாரி கேட்டதாக சொல்லிவிடுங்கள் என சொல்லி விட்டான் என கூறியுள்ளார்.
