Tamilstar
Health

புகைப் பழக்கத்திற்கு 7 எளிய மாற்றுத் தீர்வுகள்

எப்படியோ புகை பிடிக்கும் பழக்கத்தில் விழுந்துவிட்டீர்கள், இப்போது அதிலிருந்து மீள்வது சாத்தியமே இல்லாதது போல் தெரிகிறது. எண்ணற்ற ஆலோசனைகள் இருந்தாலும் எதுவும் பலனளிக்கவில்லை.

உலகில் பெருமளவில் உயிர்ப்பலி வாங்கும் கொடிய விஷயங்களில் ஒன்று புகைப்பழக்கம். குறிப்பாக ஆண்களுக்கு. இப்போது அதை நிறுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது.

கவலை வேண்டாம், எளிதாக விட்டுவிட முடியும்! இந்த எளிய முறையைப் பயன்படுத்தி இலட்சக்கணக்கானோர் புகைப்பழக்கத்தில் இருந்து மீண்டு வந்துள்ளனர். இதிலிருந்து நீங்கள் விடுதலை பெற, இதோ சில குறிப்புகள்.

டார்க் சாக்லேட்

டார்க் சாக்லேட் சாப்பிடுவது புகைபிடிப்பதற்கு நல்ல மாற்றுத் தீர்வாக உள்ளது. டார்க் சாக்லேட் மூளையில் டோபமைன் அளவை அதிகரிக்கிறது – சிகரெட்டில் இருக்கும் நிக்கோடினும் இதே வேலையையே செய்கிறது. டோபமைன் என்பது மூளையின் முக்கிய நியூரோடிரான்ஸ்மிட்டர் ஆகும். இது இன்பம், மகிழ்ச்சி மற்றும் மனநிறைவு போன்ற உணர்வுகள் சம்பந்தப்பட்டது. ஆகவே, டார்க் சாக்லேட் சாப்பிடுவதால் தினசரி உங்களுக்குத் தேவையான அளவு டோபமைன் கிடைத்துவிடுகிறது. ஆனால், இதிலும் மாட்டிக்கொள்ளக்கூடாது. ஏனெனில் டார்க் சாக்லேட் அதிகம் சாப்பிட்டால் உடல் எடை கூடும் பிரச்சனை வந்துவிடலாம்.

சுகர் ஃப்ரீ சுவிங்கம்

அதிகமாக புகைபிடிப்பவர்களுக்கு, சிகரெட்டுகள் ஆறுதல் அளிக்கும் மருந்துகள் போல செயல்படுகின்றன. புகைபிடிப்பவர்கள் தொடர்ந்து தங்கள் உதடுகளில் சிகரெட் இருக்க வேண்டும் என்பது போன்ற உணர்வைப் பெறுவார்கள். இது வாய்வழி பெறுகின்ற ஒரு ஆறுதல் உணர்வு என்று கண்டுபிடித்துள்ளனர். இந்த அடிப்படையில் தான் சுகர் ஃப்ரீ சுவிங்கம் பலனளிக்கிறது. இந்தப் பழக்கத்தில் இருந்து விடுபட அவை மிகச் சிறந்த மாற்றாக செயல்படுகின்றன. சுகர் ஃப்ரீ சுவிங்கம் மெல்லுவதால் தாடைகளுக்கும் நல்ல பயிற்சி கிடைக்கிறது, மனக் கலக்கம் போன்ற பிரச்சனைகளில் இருந்தும் நிவாரணம் கிடைக்கிறது.

யோகா

யோகா எண்ணற்ற நன்மைகளை அளிக்கிறது. தியானம் கற்றுக்கொள்வது எளிது, எங்கும், எப்போதும் தியானம் செய்ய முடியும். தொடர்ந்து தியானம் செய்பவர்களால் தங்கள் பழக்கங்களை எளிதில் விட்டுவிட முடிகிறது. தொடர்ச்சியாக தியானம் செய்வதால் மன இறுக்கம் ஏற்படாமல் மனம் ஆரோக்கியமாக இருக்கும், மன இறுக்கமும் புகைபிடிப்பதற்கான ஒரு தூண்டுதலாக உள்ளது. யோகா மனித உடலுக்கும் மனதிற்கும் பல விதமான நன்மைகளை அளிக்கிறது, இது புகைபழக்கத்திற்கு நிச்சயம் ஒரு மருந்தாக அமையும். இந்தப் பழக்கத்தில் இருந்து விடுபட ஏற்கனவே நீங்கள் ஒரு உபாயத்தைப் பின்பற்றி வருகிறீர்கள் எனில், யோகாவையும் அதனுடன் தாராளமாக சேர்த்துக்கொள்ளலாம்.

உடற்பயிற்சி

உடற்பயிற்சியானது, இவ்வளவு நாள் புகைபிடித்ததால் உடலில் சேர்ந்துள்ள நச்சுப் பொருள்களை உடல் முழுவதிலும் இருந்து வெளியேற்றுகிறது. அத்துடன் மன அமைதியை அளிக்கும் என்டோர்பினை வெளியிடுவதன் மூலம் முழு உடலுக்கும் புத்துணர்ச்சி அளிக்கிறது. ஜாகிங் அல்லது நடைபயிற்சி ஆகியவையும், நரம்புகளை அமைதிப்படுத்த நல்ல மாற்றுத் தீர்வுகளாக இருக்கும். நரம்புகளை அமைதிப்படுத்திவிட்டால், ஆறுதல் என்ற காரணத்திற்காக சிகரெட்டை நாட வேண்டிய தேவை ஏற்படாது.

இசை

சமீபத்திய ஆய்வுகளில், நிக்கோடினைப் போலவே இசையும் மனதின் நிலையை மாற்றக்கூடிய ஒன்று என்று தெரியவந்துள்ளது. ஆனால், அது நல்ல விதமாக மாற்றும் என்பது தான் வித்தியாசம்! அடுத்த முறை உங்களுக்கு புகை பிடிக்க வேண்டும் என்ற உந்துதல் ஏற்படும்போது, சிகரெட் பாக்கெட்டை எடுக்காதீர்கள். அதற்கு பதிலாக, காதில் இயர்ஃபோனை செருகிக்கொள்ளுங்கள், 10-15 நிமிடம் ஸ்ட்ரிங்ஸ் அல்லது கார்ட் போன்ற இசைக்கும் வேறு நல்ல இசையைக் கேளுங்கள்.

பானங்கள்

முதலில் நீர் அருந்தலாம், அதன் பிறகு பழச் சாறுகள் நிறைய அருந்தலாம். பழச் சாறுகள், பழத்திலிருந்து தயாரிக்கப்படும் பானங்கள் உடலுக்கு அற்புதமான நன்மை அளிப்பன. அதுமட்டுமின்றி, புகைப்பழக்கத்தை விடுவதற்கு அவை மிகவும் உதவியாக இருக்கும். அடிக்கடி திரவ ஆகாரம் எடுத்துக்கொள்வதால், புகைப்பழக்கத்தினால் உடலில் சேர்ந்துள்ள நச்சுப் பொருள்களும், மாசுகளும் வெளியேறும். வயிறு மந்தமாக இருப்பது போலத் தோன்றும்போது புகைபிடிக்கும் உணர்வு வருமல்லவா, அது போன்ற பிரச்சனையைத் தீர்க்க இது உதவுகிறது. ஏனெனில் பழச் சாறுகள் அதிகம் எடுத்துக்கொள்ளும்போது எப்போதும் வயிறு நிறைந்த உணர்வு இருக்கும்.

உடலுறவு

புகைப்பழக்கம் உடலுறவைப் பாதிக்கிறது என்பது நிரூபிக்கப்பட்ட உண்மையாகும். இது உடலின் தெம்பை பாதிப்பது மட்டுமல்லாமல், இனப்பெருக்க உறுப்புகளுக்கும் கேடு விளைவிக்கிறது. ஆகவே, ப்ரேக் எடுப்பதற்காக புகைபிடிப்பதை விட்டுவிட்டு, நிக்கோடின் ஏக்கத்தைத் தணிக்க உங்கள் அன்பானவருடன் நல்லவிதமாக நேரம் செலவிடுங்கள்.

நீங்கள் எதை விரும்புகிறீர்கள், உங்கள் வாழ்க்கையை எப்படி வாழ விரும்புகிறீர்கள் என்பதை மீண்டும் ஒரு முறை யோசிப்பதே புகைப்பழக்கத்தை விடுவதன் முதல் படியாகும். கொஞ்சம் யோசித்துப் பாருங்கள், புகைபிடிப்பதைக் காட்டிலும் சந்தோஷமான விஷயங்கள் எவ்வளவோ உள்ளன. சின்ன வயதில் நமக்கு நிக்கோடின் தேவைப்பட்டதா? நிச்சயமாக இல்லை!

எனவே இந்த எளிய முறையைப் பயன்படுத்தி நீங்களும் புகை பழக்கம் உள்ளவராயின் இதிலிருந்து விடுபடமுடியும். இது உங்களுக்கும், உங்களை சூழ இருப்பவர்களுக்கும் ஒரு நிரந்தர மகிழ்வாய் அமையும்.

படித்து விட்டு மற்றவர்களுக்கும் சேர் பண்ணுங்க, அவர்களும் பயன் பெறட்டும்.