தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஆலியா மானசா. இந்த சீரியலை தொடர்ந்து இதில் நாயகனாக நடித்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஐலா என்ற குழந்தையை பெற்றெடுத்தார். பின்னர் ராஜா ராணி சீரியலில் இரண்டாம் பாகத்தில் நடித்து வந்த இவர் இரண்டாவது முறையாக கர்ப்பம் ஆகி பிரசவத்திற்காக சீரியலில் இருந்து விலகிக்கொண்டார்.
இதனையடுத்து இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடிக்கப் போவதாக சொல்லப்பட்டு வந்தது. ஆனால் இது எந்த அளவிற்கு உண்மை என தெரியாமல் இருந்து வந்த நிலையில் ரசிகர்களுடன் உரையாடியபோது கேட்ட கேள்விக்கு இவர் பதில் அளித்துள்ளார்.
அதாவது மீண்டும் எப்போது சீரியலில் நடிக்க வருவீர்கள் என கேட்க இன்னும் சில மாதங்களில் சீரியலில் மீண்டும் நடிக்க வருவேன் என தெரிவித்துள்ளார். இதன் மூலம் இவர் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லை வேடத்தில் நடிப்பதாக வெளியான தகவல் உண்மையாக இருக்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர்.