ராஜா ராணி சீரியல் மூலம் ஒட்டு மொத்த தமிழ் ரசிகர்களின் மனங்களை கவர்ந்த ஜோடி ஆல்யா மானசா சஞ்சீவ். நீண்ட நாட்கள் ஓடிய இத்தொடரில் கணவன் மனைவியாக இருந்தவர்கள் நிஜ வாழ்க்கையிலும் ஜோடியானார்கள்.
காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்களுக்கு அண்மையில் குழந்தை பிறந்தது. இந்நிலையில் ஆல்யாவுக்கு இன்று பிறந்த நாள். இந்நிலையில் சஞ்சீவ் ரகசியமாக தன் நண்பர்கள் தோழிகளை வரவழைத்து பாட்டு பாட வைத்து கேட் வெட்டி கொண்டாடியுள்ளார்.
இதில் கையில் குழந்தையுடன் ஆல்யா இருக்கிறார். அவருடன் என்னோடு நீயிருந்தால் பாடலை பாடுகிறார். இந்த வீடியோவை ஆல்யா வெளியிட்டுள்ளார்.