Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

இனியா சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் ஆலியா பிறந்தநாள் கொண்டாடிய சீரியல் டீம்,வைரலாகும் வீடியோ

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி என்ற சீரியல் மூலம் பாப்புலரானவர் ஆலியா மானசா. இதைத்தொடர்ந்து ராஜா ராணி சீரியலின் இரண்டாம் பாகத்திலும் நடித்து வந்த இவர் இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்த காரணத்தினால் பிரசவத்திற்காக சீரியலில் இருந்து வெளியேறினார்.

அதன் பிறகு சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடரில் நடிக்க தொடங்கினார். இந்த சீரியலில் பிஸியாக நடித்து வரும் ஆலியா சமூக வலைதளங்களில் தொடர்ந்து விதவிதமான போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

இந்த நிலையில் இன்று இனியா சீரியல் ஷூட்டிங் ஸ்பாட்டில் கேக் வெட்டி தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாக பலரும் ஆலியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிய வருகின்றனர்.

 

 

View this post on Instagram

 

A post shared by alya_manasa (@alya_manasa)