நடிகை அமலா பால் கொரோனா ஊரடங்கு, சமூக விலகல், பாதுகாப்பு என இருந்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் அவரை மும்பை அதிகம் காணமுடிந்தது.
தன் நண்பர்களுடன் பார்ட்டி, சுற்று பயணம் என சந்தோசமாக இருந்தார். அப்போது மும்பையை சேர்ந்த சினிமா பாடகர் பவீந்தர் சிங்கிற்கும் அவருக்கும் கடந்த ஜூலை மாதம் திருமணமாகிவிட்டதாக புகைப்படங்கள் வெளியாகின. பவீந்தர் இதை வெளியிட்டார்.
ரசிகர்கள் ஆவலோடு அவரின் அதிகாரப்பூர்வ செய்தியை எதிர்பார்த்திருந்த நேரத்தில் புகைப்படங்கள் நீக்கப்பட்டன.
மேலும் அமலா பால் என்னுடைய திருமணத்திற்கு இன்னும் சில காலமாகும், படங்களில் தற்போது நடித்து வருகிறது. படப்பிடிப்புகள் முடிந்த பின் திருமணம் குறித்து அறிவிப்பேன், வதந்தியை பரப்ப வேண்டாம், சரியான நேரத்தில் திருமண செய்தியை அறிவிப்பேன் என பேட்டியில் கூறியிருந்தார்.
இந்நிலையில் அமலா பால் சென்ன உயர் நீதிமன்றத்தில் தனக்கும் முன்னாள் நண்பர் பவீந்தர் சிங்கிற்கும் திருமணம் நடந்துவிட்டதாக கூறி புகைப்படங்களை வெளியிட தடை செய்ய வேண்டும், அவர் மீது உரிமையியல் அவதூறு வழக்கு தொடர அனுமதிக்க வேண்டும் என மனுதாக்கல் செய்துள்ளார்.
விசாரணை செய்த நீதிபதி அவதூறு வழக்கு தொடர் அனுமதி அளித்துள்ளார்.