தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் அக்டோபர் 31ஆம் தேதி வெளியானது.
ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்திலும்,ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பிலும், உருவான இந்தப் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடித்திருந்தார். மறைந்த மேஜர் முகுந்த் வரதராஜன் அவர்களின் வாழ்க்கை வரலாற்று கதையை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
திரையரங்குகளில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. சிவகார்த்திகேயன் இந்த படத்தில் ராணுவ வீரராகவே வாழ்ந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.
இந்தப் படம் வெளியாகி இரண்டே நாட்களில் 68 கோடி வசூல் செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. இன்றும் நாளையும் வார இறுதி நாட்கள் என்பதால் விரைவில் 100 கோடியை எட்டும் என்பதில் எந்த சந்தேகமும் கிடையாது.