Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

அமரன் படத்தில் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? வைரலாகும் சூப்பர் தகவல்

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் தற்போது அமரன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது. மேஜர் முகுந்த் வரதராஜன் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாகி வருகிறது.

உலக நாயகன் கமல்ஹாசன் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தில் பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் வரும் தீபாவளி விருந்தாக அக்டோபர் 31ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே தீபாவளிக்கு பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆக உள்ள நிலையில் தற்போது அமரன் பட குழு மோதலை உறுதி செய்துள்ளது.

Amaran movie release date update
Amaran movie release date update