சோம்பு கசாயத்தில் இருக்கும் மருத்துவ பயன்கள் குறித்து நாம் பார்க்கலாம்.
பொதுவாகவே சமையலறையில் இருக்கும் மசாலா பொருட்களில் மிக முக்கியமான ஒன்று சோம்பு. இது வாசனை பொருளாக இருப்பதால் அனைவரும் விரும்பி சமைக்க பயன்படுத்துகின்றனர்.
இதில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி நீங்கள் அறிந்திருக்கிறீர்களா? வாங்க பார்க்கலாம்.
வயிற்றுப் பிரச்சனை மற்றும் செரிமான பிரச்சனைகளுக்கு சோம்பு பயன்படுகிறது. மேலும் வாய் துர்நாற்றத்தை நீக்க உதவும்.
மூச்சுத் திணறல் போன்ற சுவாச பிரச்சனைகளுக்கு சோம்பு கசாயம் மருந்தாக இருக்கிறது. சோம்புவில் இருக்கும் மெக்னீசியம், துத்தநாகம், மற்றும் தாமிரம் சரும பிரச்சனையை நீக்க உதவுகிறது.
சோம்பு கசாயத்தை தொடர்ந்து வாரத்திற்கு ஒன்று அல்லது இரண்டு முறை குடித்து வந்தால் அது நம் உடலுக்கு பல ஆரோக்கியத்தை கொடுக்கிறது.