அஸ்வகந்தா இலை ஆரோக்கியத்திற்கு மிகவும் சிறந்ததாக இருக்கிறது.
ஆயுர்வேத மூலிகைகளில் ஆரோக்கிய நன்மைகளை அதிகமாக கொடுப்பது அஸ்வகந்தா. இந்த இலையில் வைட்டமின் மற்றும் தாதுக்கள் நிறைந்து இருக்கிறது.
தூக்கமின்மை பிரச்சனையில் இருப்பவர்கள் அஸ்வகந்தா இலைகளை உட்கொள்வதன் மூலம் நன்மையடைவது மட்டுமில்லாமல் மன அழுத்தம் மற்றும் பதற்றத்தை குறைத்து ஆரோக்கியத்துடன் வாழ உதவுகிறது.
அஸ்வகந்தா இலையில் இருக்கும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்த உதவுகிறது. மேலும் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து மாரடைப்பு வராமலும் பாதுகாக்கிறது.
இந்த இலையில் இருக்கும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் பண்புகள் புற்றுநோய் செல்களை வளர விடாமல் தடுத்து புற்றுநோயின் அபாயத்தை குறைக்க உதவுகிறது. இது மட்டும் இல்லாமல் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ள உதவுகிறது.