பச்சை தக்காளியில் இருக்கும் பயன்களை குறித்து நாம் பார்க்கலாம்
நம் அன்றாடம் சமைக்கும் உணவுகளில் அதிகம் பயன்படுத்துவது தக்காளி. ஆனால் உணவுகளில் சமைக்க பயன்படுத்துவது சிவப்பு நிற தக்காளி மட்டுமே ஆனால் பச்சை நிற தக்காளியில் இருக்கும் பல ஊட்டச்சத்துக்களை குறித்து நீங்கள் அறிவீர்களா.
பச்சை தக்காளியில் வைட்டமின்கள் ஆன்டி-ஆக்ஸிடன்ட் கால்சியம் பொட்டாசியம் மெக்னீசியம் பாஸ்பரஸ் போன்ற பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது இதனை சட்னி அல்லது சாலட் செய்து சாப்பிட்டால் கண் பார்வையை வலுப்படுத்த உதவுகிறது.
மேலும் சருமத்திற்கு நன்மையையும் தோள்களில் உள்ள செல்களை மேம்படுத்தவும் பச்சை தக்காளி உதவுகிறது.
பச்சை தக்காளியில் வைட்டமின் சி அதிகமாக இருப்பதால் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து காய்ச்சல் சளி பிரச்சனையில் இருந்து நம்மை விடுவிக்க உதவுகிறது.
மேலும் ரத்தம் உறைவதை குறைக்கவும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தவும் பச்சை தக்காளி பெருமளவில் உதவுகிறது.