எலுமிச்சை பழ இலையில் இருக்கும் மருத்துவ பயன்கள் குறித்து பார்க்கலாம்.
எலுமிச்சை பழத்தில் இருக்கும் நன்மைகள் குறித்து அனைவரும் அறிந்ததே ஆனால் எலுமிச்சை பழத்தின் இலையில் இருக்கும் நன்மைகளை அறிந்திருக்கிறீர்களா? வாங்க பார்க்கலாம்.
எலுமிச்சை இலையில் ஆன்ட்டி ஆக்சிடென்ட் மற்றும் பாஸ்பரஸ் கால்சியம் சத்துக்கள் உடலில் இருக்கும் நோய்களுக்கு மருந்தாக இருக்கிறது.
எலுமிச்சை இலைகளை தண்ணீரில் கொதிக்க வைத்து அதில் சிறிதளவு தேன் கலந்து குடித்து வர வேண்டும் அப்படி குடித்து வந்தால் கிட்னி கல்பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
மேலும் சிறுநீரக கல் பிரச்சனை அபாயத்தையும் கட்டுப்படுத்தும். மேலும் ஒற்றை தலைவலியால் அவதிப்படுபவர்களுக்கு எலுமிச்சைச்சாறுகளை மருந்தாக பயன்படுகிறது.
மேலும் எலுமிச்சை இலைகளில் இருக்கும் நீர் மன அழுத்தத்தை குறைக்க பயன்படுகிறது. இது மட்டும் இல்லாமல் நரம்பு தளர்ச்சியில் இருந்தும் விடுபடலாம்.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் தூக்கமின்மையை சந்திக்கின்றனர் அப்படி தூக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்களுக்கு எலுமிச்சை இலை மருந்தாகிறது.