மா இலையில் இருக்கும் அற்புத பயன்கள் குறித்து பார்க்கலாம்.
பொதுவாகவே மாம்பழம் மற்றும் மாங்காய் அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அதில் ஆரோக்கியமும் நிறைந்திருக்கிறது. ஆனால் மா இலைகளில் இருக்கும் ஆரோக்கியத்தை குறித்து நீங்கள் அறிந்துள்ளீர்களா. இது உடல் நலத்திற்கு சிறந்தது.
புற்றுநோய் பிரச்சனையை எதிர்த்து போராடும் சக்தி இந்த இலைக்கு உள்ளது. ஆஸ்துமா சம்பந்தப்பட்ட பிரச்சனை இருப்பவர்கள் இலைகளை வேக வைத்து குடித்து வந்தால் நல்லது. தொண்டை வலி இருமல் பிரச்சனையும் போக்கும்.
சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த மா இலைகள் பயன்படுகிறது. ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகிறது.
வயிற்றுப் புண் பிரச்சனைக்கு மா இலை ஒரு மருந்தாக பயன்படுகிறது. பெண்களுக்கு பெரும்பாலும் முடி உதிர்தல் பிரச்சனை இருக்கும் அதனை தடுத்து முடியாத அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர உதவுகிறது.
எனவே பல ஆரோக்கியம் நிறைந்த மா இலைகளை பயன்படுத்தி உடனே ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.