முள்ளங்கி இலையில் இருக்கும் அற்புத பயன்களை குறித்து பார்க்கலாம்.
நாம் சமையலில் உபயோகப்படுத்தும் காய்கறிகளில் ஒன்று முள்ளங்கி. ஆனால் பெரும்பாலானோர் முள்ளங்கியை பயன்படுத்திவிட்டு இலைகளை தூக்கி எறிந்து விடுவார்கள். ஆனால் தூக்கி எறியும் இலையில் இருக்கும் நன்மைகள் பற்றி உங்களுக்கு தெரியுமா. வாங்க பார்க்கலாம்.
சிறுநீரக கற்களை கரைத்து சிறுநீர் சீராக வர முள்ளங்கி இலை முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும் முள்ளங்கி இலையில் வைட்டமின் ஏ நிரம்பி இருப்பதால் இது சரும பிரச்சனைகளானா முகப் பருக்கள் வராமல் பொலிவாக வைத்துக்கொள்ள உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் வைட்டமின் சி இருப்பதால் இது உடலுக்கு தேவையான நோய் எதிர்ப்பு சக்தியை கொடுக்கிறது. குறிப்பாக பைல்ஸ் பிரச்சனையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு முள்ளங்கி இலையை சாப்பிடுவதன் மூலம் வீக்கத்தை குறைத்து மலச்சிக்கலில் இருந்து விடுபட உதவுகிறது.
இதில் இரும்புச் சத்து நிறைந்திருப்பதால் ஹீமோகுளோபின் குறைவால் அவதிப்படுபவர்களுக்கு இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே முள்ளங்கி இலையில் இருக்கும் ஆரோக்கிய நன்மைகளை அறிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.