முள்ளங்கியில் இருக்கும் பயன்கள் குறித்து பார்க்கலாம்.
நாம் அன்றாடம் சமைக்கும் உணவுகளில் பயன்படுத்தப்படும் காய்கறிகளில் ஒன்று முள்ளங்கி. இது ரத்த சோகை பிரச்சனை உள்ளவர்களுக்கு மருந்தாக பயன்படுகிறது. இதில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.
முள்ளங்கியில் இருக்கும் வைட்டமின் ஏ மற்றும் சி கால்சியம் பாஸ்பரஸ் போன்ற சத்துக்கள் நம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுக்கிறது. நாம் தினமும் முள்ளங்கி சாப்பிடும் போது நோய் எதிர்ப்பு சக்தி நமக்கு அதிகமாக கிடைக்கிறது. சளி இருமல் பிரச்சனைகளுக்கு முள்ளங்கி மருந்தாக இருக்கிறது.
நீரிழிவு நோயாளிகள் முள்ளங்கி சாப்பிட்டால் ரத்த சர்க்கரையளவு கட்டுப்பாட்டுடன் இருக்கிறது என தெரிவிக்கின்றன. இருப்பினும் மருத்துவரை அணுகி கேட்டு சாப்பிடுவது சிறந்தது.
இதய நோய் பிரச்சனையில் இருந்து விடுபட முள்ளங்கி உதவுகிறது. இதுபோல் நம் உடலுக்கு ஆரோக்கியம் தரும் காய்கறிகளை சாப்பிடுவதன் மூலம் நோய் வராமல் தடுக்கலாம்.