Tamilstar
Health

அரிசி கழுவிய தண்ணீரில் இருக்கும் அற்புத பயன்கள்.

Amazing Benefits of Rice Wash Water

அரிசி கழுவிய தண்ணீரில் இருக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம்.

பெரும்பாலும் சாதம் செய்வதற்கு முன் அரிசியை கழுவி அந்த நீரை கீழே ஊற்றுவது தான் வழக்கம்.ஆனால் இந்த நீரில் இருக்கும் எக்கச்சக்க நன்மைகளை குறித்து நீங்கள் அறிவீர்களா?வாங்க பார்க்கலாம்.

அரிசி கழுவிய நீரில் வைட்டமின்கள் தாதுக்கள் இருப்பதால் அது நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை கொடுக்கிறது. குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு பிரச்சனைகளை நீக்கவும் உதவுகிறது.

சரும செல்களை சரி செய்து முகத்தை தெளிவாக வைத்துக் கொள்ளவும் முகச் சுருக்கத்தை தடுக்கவும் உதவுகிறது.

இது நீர்ச்சத்து அதிகம் இருப்பதால் நோய் தொற்று காய்ச்சல் போன்றவற்றில் இருந்தும் பாதுகாக்கலாம்.

அரிசி கழுவிய நீரில் முடியை அலசி வந்தால் முடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர உதவும். அழகு சாதன பொருட்களிலும் அரிசி கழுவிய நீரை பயன்படுத்துவது உண்டு.

எனவே அரிசி கழுவி கீழே ஊற்றும் தண்ணீரில் இருக்கும் அற்புத பயன்களை அறிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.