எலுமிச்சை விதையில் இருக்கும் பயன்கள் குறித்து தெளிவாக பார்க்கலாம்.
பொதுவாகவே நாம் எலுமிச்சை பழம் பயன்படுத்தி விட்டு அந்த விதையை தூக்கி எறிந்து விடுவோம் ஆனால் அதில் உள்ள சாலிசிலிக் அமிலம் உடல் வலியை கட்டுப்படுத்த உதவுகிறது.
எலுமிச்சை பழம் விதையை நன்றாக பேஸ்ட் செய்து கொண்டு நம் உடலில் எங்கு வலி இருப்பதை உணர்கிறோமோ அந்த இடத்தில் தடவி வந்தால் வலி விரைவாகவே குணமடையும்.
மேலும் குழந்தைகள் அதிகமாக பாதிக்கப்படும் நூல் புழு பிரச்சனையில் இருந்து விடுபட சிறந்த மருந்தாக இருக்கிறது.
இது மலக்குடல் மற்றும் சிறுநீர் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. முதலில் எலுமிச்சை விதைகளை எடுத்து நன்றாக நசுக்கி தண்ணீரில் கொதிக்க வைக்க வேண்டும். பிறகு அந்த நீரை குடித்து வந்தால் பிரச்சனை விலகும்.
இதனைத் தொடர்ந்து முகப்பொலிவிற்கு எலுமிச்சை விதை பயன்படுத்தலாம். விதைகளை நன்றாக நசுக்கி தேனில் கலந்து முகத்தில் தடவி வந்தால் சரும பிரச்சனை இருந்து விலகலாம்.
இது மட்டும் இல்லாமல் விரல் தொற்று ஏற்பட்டவர்களுக்கு எலுமிச்சை விதை பேஸ்ட்டை பயன்படுத்தினால் தொற்றிலிருந்து விலகலாம்.