தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகி சில வாரங்களுக்கு முன்னர் நிறைவுபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் என்ட்ரி ஆக நுழைந்தவர் டான்ஸ் மாஸ்டர் அமீர். பிக் பாஸ் வீட்டுக்குள் சென்ற அவர் பாவனியை காதலிப்பதாக கூறி வந்தார். அவருக்கு எதிர்பாராத விதமாக முத்தம் கொடுத்த விஷயம் எல்லாம் படு பரபரப்பாகப் பேசப்பட்டது.
பாவனியும் நானும் நல்ல நண்பர்களாகவே பழகி வருகிறோம் என பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அமீர் விளக்கம் அளித்திருந்தார். இருவரும் பிக்பாஸ் கொண்டாட்டம் நிகழ்ச்சியில் இணைந்து நடனமாடி இருப்பதாகவும் சொல்லப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் அமீர் மற்றும் பாவணி இருவரும் ஒன்றாக வெளியில் சென்று ஊர் சுற்றிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் தீயாக பரவி வருகிறது.