சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி முதல் 3 சீசன்களை நிறைவு செய்துள்ளது.
விரைவில் இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் தொடங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியில் யார் யார் கலந்து கொள்வார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.
சில நடிகர், நடிகைகளின் பெயர்கள் அடி பட்டு வருகின்றன. அந்த வகையில் இந்த நிகழ்ச்சியில் பிகில் பட நடிகையான அமிர்தா அய்யரும் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் தற்போது அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரியில் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புகிறேன். நான் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார்.
இதனால் அமிர்தா ஐயரை பிக்பாஸ் வீட்டிற்குள் எதிர்பார்த்த அவரது ரசிகர்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.