கடந்த வருடம் தென்னிந்தியாவில் கிரீன் இந்தியா சவால் பரவியது. ஒருவர் மரக்கன்று நட்டு இன்னொருவரை மரக்கன்று நடும்படி சவால் விட வேண்டும். இதுதான் கிரீன் இந்தியா சேலஞ்ச்.
தெலுங்கு நடிகர் மகேஷ் பாபு தனது பிறந்தநாளில் ஒரு மரக்கன்று நட்டு நடிகர் விஜய்யை கிரீன் இந்தியா சவாலுக்கு அழைத்தார். இந்த சவாலை ஏற்று விஜய்யும் ஒரு மரக்கன்று நட்டார். இதேபோல் பல நட்சத்திரங்கள் மரக்கன்றுகள் நட்டனர்.
சமீபத்தில் தெலுங்கானா மாநிலங்களவை எம்பி சந்தோஷ் குமார் நடிகர் அமிதாப்பச்சனுக்கு கிரீன் இந்தியா சவாலை விடுத்திருந்தார். இதனை ஏற்றுக் கொண்ட நடிகர் அமிதாப்பச்சன், பிரபாஸ் நடிக்கும் படத்திற்காக ஐதராபாத் சென்ற இடத்தில் மரக்கன்றை நட்டு இருக்கிறார்.