தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான நிகழ்ச்சி குக் வித்து கோமாளி. இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்று இருப்பவர் அம்மு அபிராமி.
படங்களில் துணை நாயகியாக நடித்து வந்த இவர் தற்போது நாயகியாக ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதுவும் குக்கு வித் கோமாளி படத்தில் புகழுக்கு ஜோடியாக நடிக்கிறார். பாலமுருகன் இயக்கும் புதிய படத்திற்கு குதூகலம் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.
இந்த படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.