Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பத்து தல படத்தில் மணல் மாஃபியா கிங்காக சிம்பு.!! மாஸ் புகைப்படம் வைரல்

ananda vikatan cover this week pathu thala simbu photo update

தமிழ் திரை உலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் சிம்பு. இவர் வெந்து தணிந்தது காடு திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து ஒபேலி என் கிருஷ்ணா இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘பத்து தல’ திரைப்படத்தில் நடித்திருக்கிறார்.

ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் சார்பில் கே.இ.ஞானவேல் ராஜா தயாரித்திருக்கும் இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்து வருகிறார். பல முன்னணி நட்சத்திரங்கள் இணைந்து நடித்து இருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வர இருக்கும் நிலையில் இப்படத்தின் முதல் பாடல் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் ஆனந்த விகடனின் இந்த வார இதழில் மணல் மாஃபியா கிங்ஸ் சிம்பு எனக் குறிப்பிட்டு பத்து தல திரைப்படத்தின் வெறித்தனமான லுக்கில் இருக்கும் சிம்புவின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. அது தற்போது ரசிகர்கள் மத்தியில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.