Tamilstar
News Tamil News

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் மரணம்!- தமிழர்களை சோகத்தில் ஆழ்த்திய சம்பவம்

கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகை யே ஆட்டிப்படைத்து வருகிறது. அதனால் லட்சக்கணக்கானோர் இறந்துள்ளனர். இன்னும் அதன் பாதிப்பு அதிகமாகி வருவதாக செய்திகள் வந்த வண்ணம் இருக்கின்றன.

இதற்கிடையில் டிவி, திரையுலகம் சார்ந்த பலர் இறந்த தகவல் அவ்வப்போது வெளியாகி வருத்தத்தில் ஆழ்த்தி வருகின்றன. இந்நிலையில் இலங்கையை சேர்ந்த மூத்த வானொலி அறிவிப்பாளர் மற்றும் திரைப்படக் கலைஞரான எஸ்.நடராஜ சிவம் நேற்றிரவு காலமானதாக தகவல் வந்துள்ளன.

அன்னாருக்கு வயது 74. வயது முதிர்வு காரணமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்துள்ளார்.

நடராஜ சிவம் இலங்கை அரசின் ரேடியோ சிலோன் வானொலி மூலம் பிரபலமாகி பின் திரைத்துறையிலும் பணியாற்றினார். மேலும் இவர் தமிழ், சிங்களம் மொழிகளில் நாடகங்களிலும் நடித்து வந்தது குறிப்பிடத்தக்கது.

இதனால் இலங்கையை வானொலி உட்பட பல ஊடகங்கள் அவரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளன.

பாட்டுக்கு பாட்டு நிகழ்ச்சி குரல் பிரபலமான அப்துல் ஹமீது வேதனையுடன் பதிவிட்டுள்ளார்.

Posted by B.H.Abdul Hameed on Wednesday, June 24, 2020