Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

படப்பிடிப்பு தளத்தில் கிரிக்கெட் விளையாடிய ‘அந்தகன்’ படக்குழுவினர் – வைரலாகும் வீடியோ

‘Andhagan’ crew playing cricket at the shooting site

பாலிவுட்டில் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட்டான படம் ‘அந்தாதூன்’. இப்படத்தை தமிழில் ரீமேக் செய்கின்றனர். ‘அந்தகன்’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் பிரசாந்த் நாயகனாக நடிக்கிறார். இதற்காக அவர் பிரத்யேகமாக பியானோ பயிற்சி பெற்றுள்ளார்.

மேலும் சிம்ரன், வனிதா, பிரியா ஆனந்த், யோகிபாபு, சமுத்திரகனி, கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தை பிரசாந்த்தின் தந்தை தியாகராஜனே இயக்குகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், படப்பிடிப்பு தளத்தில் அந்தகன் படக்குழுவினர் கிரிக்கெட் விளையாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் நடிகர்கள் பிரசாந்த், யோகிபாபு, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் கிரிக்கெட் விளையாடும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ஷூட்டிங் இடைவேளையில் அவர்கள் கிரிக்கெட் விளையாடியதாக கூறப்படுகிறது.