Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

ஆண்ட்ரியாவை பிரேக்கப் செய்வதற்கு இது தான் காரணம்.. இணையத்தில் வைரலாகும் அனிருத் பேசிய வீடியோ

anirudh-about-andrea breakup

தென்னிந்திய சினிமாவில் பிரபல முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக வலம் வருபவர் அனிருத். தொடர்ந்து அஜித் விஜய் சூர்யா தனுஷ் ரஜினி கமல் என பல்வேறு நடிகர்களின் படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இவரும் நடிகை ஆண்ட்ரியாவும் காதலித்து வந்த தகவல் அனைவரும் அறிந்ததே. ஆனால் தற்போது இருவரும் பிரேக்கப் செய்து பிரிந்துவிட்ட நிலையில் முதல் முறையாக பிரேக்கப் குறித்து பேசிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அனிருத் ஆண்ட்ரியாவை காதலித்தது உண்மைதான் என தெரிவித்துள்ளார். அப்போது எனக்கு 19 வயது அவருக்கு இருபத்தி ஐந்து வயது. பிரேக்கப் ஆவதற்கு வயது வித்தியாசம் தான் காரணமாய் என கேட்க அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை, செட்டாகவில்லை என தெரிவித்துள்ளார்.

மேலும் இது ட்ரு லவ்வா என கேட்க அது எனக்கு சரியாக தெரியவில்லை. அதை நான் ரிவியூ செய்யவும் இல்லை. அப்படியே விட்டுவிட்டேன் என தெரிவித்துள்ளார். இதுவரை ஆண்ட்ரியாவின் பெயரை சொல்லாமல் பேசிய அனிரூத் அவருடைய பெயரை சொல்ல முடியுமா எனக் கேட்க ஆண்ட்ரியா என தெரிவித்துள்ளார்.