Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

பிரபல பாடகியிடம் காதலில் விழுந்த அனிருத்.. எல்லாம் டாக்டர் பட பாட்டு பண்ண வேலை – யார் அந்த பாடகி தெரியுமா??

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் அனிருத். இவரது இசையில் அடுத்ததாக தளபதி விஜயின் மாஸ்டர், சிவகார்த்திகேயனின் டாக்டர் உள்ளிட்ட புகைப்படங்கள் வெளியாக உள்ளன.

பல வருடங்களுக்கு முன்பு இசையமைப்பாளர் அனிருத் பாடகியும் நடிகையுமான ஆண்ட்ரியாவை காதலிப்பதாக கிசுகிசுக்கப்பட்டது வந்தது. அதன் பின்னர் சுச்சி லீக்ஸில் இருவரும் முத்தமிட்டுக் கொள்ளும் புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆனால் அந்த புகைப்படங்கள் உண்மையா அல்லது மார்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டதா என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை.

இப்படியான நிலையில் அனிருத் பாடகி ஜோனிடா காந்தியுடன் காதலில் இருந்து வருவதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

இவர்கள் இருவரும் டாக்டர் படத்தில் இருந்து வெளியான செல்லமா பாடலை இணைந்து பாடி இருந்தனர். இந்த பாடலின் மூலமாக தான் இருவருக்கும் இடையே காதல் மலர்ந்து இருப்பதாக பிரபல பத்திரிகையாளர்கள் யூடியூப் சேனல் ஒன்றில் தெரிவித்துள்ளனர்.

இது எந்த அளவிற்கு உண்மை என்பது அனிருத், ஜோனிடா காந்தி ஆகியோரின் திருமணம் குறித்த அறிவிப்பு வெளியானால் தான் தெரியும்.