உடல் எடையை குறைக்க சோம்பு பயன்படுகிறது.
அன்றாடம் சமைக்கும் உணவுப் பொருட்களில் வாசனையும் சுவையையும் கூட்டுவதில் முக்கிய பங்கு வகிப்பது சோம்பு. இது உணவிற்கு மட்டுமல்லாமல் உடல் எடையை குறைக்கவும் ஒரு முக்கிய பொருளாக இருக்கிறது.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலான ஒரு உடல் எடையை குறைக்க பல்வேறு டயட்டுகளும் உடற்பயிற்சிகளும் செய்து வருகின்றனர் அதனுடன் சோம்பை நாம் பயன்படுத்தியும் உடல் எடையை குறைக்கலாம்.
ஒரு நாளைக்கு இரண்டு ஸ்பூன் சோம்பு சாப்பிடுவது நல்லது. இதை ஊற வைத்து தண்ணீராகவும் குடித்து வரலாம்.
சோம்பு தண்ணீர் தொடர்ந்து குடித்து வரும்போது செரிமானத்தை மேம்படுத்தி உடல் எடையை குறைக்க உதவுகிறது. இது மட்டும் இல்லாமல் ஒரு ஸ்பூன் சோம்பை நன்றாக வறுத்து அதில் சிறிதளவு சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலுக்கு நன்மையை கொடுக்கிறது.
வயிற்றுப் பிடிப்பு பிரச்சனைகளுக்கும் சோம்பு தேநீர் ஒரு சிறந்த மருந்தாக இருக்கிறது. இது உடல் எடையை குறைப்பது மட்டுமில்லாமல் குளிர்ச்சியாக வைத்து கொள்வதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது.