தமிழ் சின்னத்திரையில் சன் நெட்வொர்க்கின் செய்தி தொடர்பாளராக வலம் வந்தவர் அனிதா சம்பத். அதன் பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியின் 4 வது சீசனில் போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்றார். மேலும் பிக்பாஸ் ஜோடிகள் என்ற நிகழ்ச்சியில் ஷாரிக்குடன் இணைந்து நடனம் ஆடி மிகுந்த பாராட்டுகளை பெற்றார்.
தற்போது தன்னுடைய கணவர் பிரபாவுடன் இணைந்து மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில் இவர் தன்னுடைய கணவருடன் சேர்ந்து திநகரில் உள்ள வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் ஷாப்பிங் செய்துள்ளார். மிக மிகக் குறைந்த விலையில் விதவிதமான ஆடைகளை பார்த்ததும் அத்தனையும் வாங்கி குவித்துள்ளார்.
இவர்கள் இருவரும் இணைந்து கலாட்டாவாக ஷாப்பிங் செய்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதற்கு முன்னதாக இதே வேலவன் ஸ்டோர்ஸ் கடையில் வனிதா விஜயகுமார், உமா ரியாஸ்கான், பாலா, புகழ், மணிமேகலை, சிவாங்கி என பல திரையுலக பிரபலங்கள் இந்த கடையில் ஷாப்பிங் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.