தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் அஞ்சலி. தெலுங்கு சினிமா மூலம் திரையுலகில் அறிமுகமானாலும் அங்காடி தெரு திரைப்படம் தான் இவருக்கு மிகப்பெரிய அங்கீகாரத்தை கொடுத்தது.
அதன் பிறகு தொடர்ந்து பல நடிகர்களுக்கு ஜோடியாக பல்வேறு படங்களில் நடித்து வரும் அஞ்சலி சமீபத்திய பேட்டி ஒன்றில் தன்னுடைய வருங்கால கணவர் குறித்து பேசியுள்ளார்.
எல்லோரும் நல்ல பையனை திருமணம் செய்யுங்க என தெரிவித்துள்ள இவர் என்னை பொருத்தவரை நல்ல பையன் என்றால் திருமணத்திற்கு பிறகு மரியாதை கொடுக்க வேண்டும். அதன் பிறகு தான் அன்பு, காதல் எல்லாம் என கூறியுள்ளார்.
அப்படி இருக்கும் ஆண்களை தான் தனக்கு பிடிக்கும் என தெரிவித்துள்ளார்.