நடிகை அஞ்சலியை கடைசியாக நாடோடிகள் 2 படத்தில் நாம் பார்த்தோம். தமிழ், தெலுங்கு படங்களில் நடித்து வருகிறார். பவர் ஸ்டார் பவன் கல்யாணுடன் அவர் நடித்துள்ள வக்கீல் சாப் படம் விரைவில் வெளியாகவுள்ளது. இப்படம் தமிழில் அஜித் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தின் ரீமேக்.
நிசப்தம் என அவர் தமிழில் நடித்துள்ள படம் தயாரிப்பு பணிகளில் இருக்கிறது. இந்நிலையில் அவர் தெலுங்கில் மீண்டும் சீனியர் நடிகரான நந்தாமுரி பாலகிருஷ்ணாவுடன் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
போயப்புட்டி ஸ்ரீனு மூன்றாம் முறையாக பாலகிருஷ்ணாவை வைத்து இயக்கும் இப்படம் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வருமாம்.
Dictator என்ற படத்தில் அஞ்சலி ஏற்கனவே பாலகிருஷ்ணாவுடன் இணைந்து நடித்துள்ளார்.