Tamilstar
Movie Reviews சினிமா செய்திகள்

அன்ன பூரணி திரை விமர்சனம்

ஸ்ரீரங்கத்தில் ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தவர் நயன்தாரா. இவரின் தந்தை நல்ல படித்திருந்திருந்தும் பெருமாள் கோவிலில் பிரசாதம் செய்யும் இடத்தில் வேலைசெய்கிறார். இதனை பார்த்து வளரும் நயன்தாரா மிகப்பெரிய சமையல் கலைஞராக வேண்டும் என்ற குறிக்கோளுடன் இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் சமையல் கலைஞருக்கான படிப்பை படிக்க ஆசைப்படுகிறார். ஆனால், நயன்தாராவின் தந்தை அசைவ உணவு சாப்பிட நேரிடும் என்ற காரணத்திற்காக அவரின் ஆசைக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் இருக்கும் நயன்தாராவிற்கு அவரின் நண்பரான ஜெய் ’உனக்கு என்ன செய்ய தோன்றுகிறதோ அதை செய்’ என்று ஊக்கம் கொடுக்கிறார்.

இதைத்தொடர்ந்து நயன்தாரா வீட்டிற்கு தெரியாமல் சமையல் கலைஞருக்கான படிப்பை படிக்கிறார். அப்போது ஒருநாள் நயன்தாராவின் தந்தை வெளியூர் செல்வதால் நயன்தாராவிடம் வீட்டு சாவியை கொடுக்க செல்லும் பொழுது நயன்தாரா அசைவ உணவு சாப்பிடுவதை பார்த்துவிடுகிறார்.

இதனால் மனமுடைந்த நயன்தாராவின் தந்தை உடனே அவருக்கு திருமண ஏற்பாடு செய்கிறார். இறுதியில் நயன்தாராவின் கனவு என்ன ஆனது? அவர் தான் ஆசைப்பட்டபடி சமையல் கலைஞர் ஆனாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நயன்தாரா வழக்கம் போல் தன் கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார். இரண்டாம் பகுதியில் இவரின் நடிப்பு ரசிக்க வைத்துள்ளது.ஜெய் ஒரு சில காட்சிகளில் மட்டுமே இடம்பெறுகிறார். சத்யராஜ், ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் கதாபாத்திரத்திற்கு தேவையான நடிப்பை கொடுத்து கவர்ந்துள்ளனர்.

சைவம் மற்றும் அசைவத்தை மையமாக வைத்து கதையை இயக்கியுள்ளார் இயக்குனர் நிலேஷ் கிருஷ்ணா. அழுத்தமான சில வசனங்கள் இருந்தாலும் பல விஷயங்கள் பேசப்படாமல் தவிர்த்திருப்பது வருத்தம். அடுத்தடுத்த காட்சிகள் யூகிக்கும் படி அமைந்துள்ளது படத்திற்கு பலவீனம்.

தமன் இசையில் பாடல் அனைத்தும் கேட்கும் ரகம்.

சத்யன் சூரியன் ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

பிரவின் ஆண்டனி படத்தொகுப்பு கவர்கிறது.

ஜீ ஸ்டுடியோஸ் மற்றும் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து ’அன்னபூரணி’ திரைப்படத்தை தயாரித்துள்ளது.

Annapoorni movie review update
Annapoorni movie review update