தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவாகி வரும் அண்ணாத்த என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இப்படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடிக்க கீர்த்தி சுரேஷ், குஷ்பூ, மீனா, சூரி, சதீஷ் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
மேலும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் வேல ராமமூர்த்தி ஆகியோர் வில்லன்களாக நடிக்க தேர்வாகியுள்ள நிலையில் முக்கிய வில்லனாக நடிக்க ஜாக்கி ஷெராப் கமிட்டாகி உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழ் சினிமாவின் ஆரண்யகாண்டம் என்ற படத்தின் மூலமாக வில்லனாக அறிமுகமான இவர் பிகில் படத்திலும் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
கொரோனா வைரஸ் தொற்றால் படப்பிடிப்புகள் நடைபெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இப்படம் 2021 ஆம் ஆண்டில் பொங்கல் அல்லது சம்மர் விடுமுறையில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.