சித்ராலயா கோபு இயக்கத்தில் முத்துராமன், தேங்காய் சீனிவாசன், வெண்ணிற ஆடை மூர்த்தி, மனோரமா நடிப்பில் கடந்த 1972-ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம் ‘காசேதான் கடவுளடா’. தற்போது இப்படத்தை ரீமேக் செய்கின்றனர். ஆர்.கண்ணன் இயக்கும் இப்படத்தில் சிவா ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நடிகை பிரியா ஆனந்த் நடிக்கிறார். மேலும் யோகிபாபு, ‘குக் வித் கோமாளி’ சிவாங்கி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சி மூலம் பிரபலமான புகழ், இப்படத்தில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். சென்னையில் நடைபெற்று வரும் ‘காசேதான் கடவுளடா’ ரீமேக் படத்தின் படப்பிடிப்பில் அவர் கலந்துகொண்டுள்ளார். இதுதவிர அஜித்தின் வலிமை, சந்தானத்தின் சபாபதி, விஜய்சேதுபதியின் 46-வது படம் ஆகியவற்றிலும் புகழ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.