Tamilstar
News Tamil News சினிமா செய்திகள்

விஜய்பாபு மீது மேலும் ஒரு பெண் பாலியல் குற்றச்சாட்டு

Another woman sexually assaults Vijaybabu

மலையாள படங்கில் நடிகராகவும் தயாரிப்பாளராகவும் இருப்பவர் விஜய்பாபு. இவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக இளம்நடிகை குற்றம் சாட்டினார்.

இது தொடர்பாக கொச்சி போலீஸ் நிலையத்திலும் அவர் புகார் கொடுத்தார்.  அதன் அடிப்படையில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். விசாரணைக்காக விஜய்பாபுவை போலீசார் அழைத்தனர்.

ஆனால் அவர் விசாரணைக்கு ஆஜராகாமல் தலைமறைவாகி விட்டார். இதற்கிடையில் சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்ட வீடியோவில் குறிப்பிட்ட நடிகையின் பெயரை வெளியிட்டதோடு, அந்த நடிகை தன்னை அச்சுறுத்துவதாகவும் தெரிவித்து இருந்தார்.

இதற்கிடையில் பாலியல் புகார் கூறிய பெண்ணின் பெயரை வெளியிட்டதால் விஜய்பாபு மீது மேலும் ஒரு வழக்கை போலீசார் பதிவு செய்தனர். மேலும் அவர் வெளிநாடு தப்பிச் செல்லாமல் இருக்க லுக்அவுட் நோட்டீசும் பிறப்பிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசார் விஜய்பாபுவை தேடி வந்தாலும் அவர் எங்கிருக்கிறார் என கண்டுபிடிக்க முடியவில்லை.

இந்த சூழலில் விஜய்பாபு மீது மற்றொரு பெண் பாலியல் குற்றச்சாட்டை தெரிவித்துள்ளார். அந்தப் பெண், விஜய்பாபுவின் தயாரிப்பு நிறுவனத்தில் முன்பு பணியாற்றியவர். அவர், கடந்த ஆண்டு நடிகரும் தயாரிப்பாளருமான விஜய்பாபுவை சந்தித்தேன்.

நாங்கள் சில தொழில்முறை விஷயங்களை பற்றி விவாதித்தோம். எங்களுடன் இருந்த நண்பர் அறையை விட்டு திடீரென வெளியே சென்றார். அதன்பிறகு நான் மற்றும் விஜய்பாபு மட்டும் அறையில் இருந்தோம்.

அப்போது விஜய்பாபு மது அருந்திவிட்டு, என்னை முத்தமிட முயன்றார். ஆனால் நான் விலகிவிட்டேன். உடனடியாக அங்கிருந்து வெளியேற முயன்றேன். அப்போது விஜய்பாபு, என்னை மன்னித்து விடு. இதுபற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்றார். அதன்பிறகு நான் வேலையை விட்டுவிட்டேன். இப்போது அவர் மீது ஒரு பெண் புகார் கொடுத்துள்ள நிலையில், நானும் இதுபற்றி தெரிவிக்கிறேன். அந்தப் பெண்ணுக்காக குரல் கொடுக்க நான் வந்துள்ளேன். இவ்வாறு அந்த பெண் தெரிவித்துள்ளார்.

இந்தசூழலில் விஜய்பாபு முன்ஜாமீன் கேட்டு கேரள ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை பரிசீலிக்க மறுத்த ஐகோர்ட்டு, கோடை விடுமுறைக்குப் பின்னர் விசாரிக்க முடிவு செய்துள்ளது.